Thursday, March 5, 2015

நிலங்களும் முகங்களும்



அன்புள்ள ஜெ

வெண்முரசு மெல்லமெல்ல இந்தியாவின் எல்லா தொல்குடிகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொண்டு ஒரு பெரிய பாய்போல விரிவடைவதாக எனக்குத்தோன்றுகிறது. பலுசிஸ்தான் ஒருபக்கம் திராவிடமும் தமிழ்நாடும் ஒருபக்கம். சரியான அர்த்ததில் இதுதான் ‘மகாபாரதம்’ என்பது என நினைக்கிறேன்

அதைப்போல நிலங்கள். இந்தியா என்ற விரிந்த நிலத்தின் எல்லா இடங்களும் இதற்குள்ளேயே வந்துவிட்டன. வடகிழக்கு பகுதியான காமரூபம் தவிர. அதைத்தான் இப்போது போய்ப்பார்த்துவிட்டு வந்துவிட்டீர்கள் இல்லையா?

இந்தியாவை இப்படி ஒரு மாபெரும் காவியம் ஒன்றாக இணைத்துக்கட்டியிருப்பதை நினைக்க நினைக்க பெருமிதமாக இருக்கிறது

கல்யாண் ராமன்