Friday, March 6, 2015

உரித்த யானை



ஜெ,

வெண்முகில்நகரம் 19 ஐ மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதில் வரும் யோகக் குறியீடுகளையும் விக்ரகங்களையும் தனியாக புரிந்துகொள்ளாமலிருந்தால் வெறும் மொழியாகவே அது அனுபவமாகிவிடும் என்று நினைக்கிறேன். அந்த குறியீடுகள் எப்படி ஒரு மனதுக்குள் போய் இப்படியெல்லாம் உருவாகி மாறிவருகின்றன என்பதை ஒரு ஆச்சரியமாகவே நினைத்துக்கொண்டிருக்கிறேன். என் தியான அனுபவத்திலே சில துளிகள் சம்பவித்திருக்கின்றன என்று மட்டுமே சொல்லமுடியும்

யானையை உரித்துப் போர்த்திக்கொள்ளுவது சிவனுடைய லீலைகளில் ஒன்று. கஜசம்ஹாரமூர்த்தி. ஆனால் சிவன் செய்த எல்லாமே சக்தியும் செய்ததாக சாக்தம் சொல்லும். கொற்றவை பெண் சிவ வடிவம். முக்கண் பிறைநிலவு மான் மழு எல்லாமே உண்டு. கஜத்தோல் போர்த்தியதையும் எழுதியிருக்கிறீர்கள் , அது இருளைக்கிழித்து எழுவதாக இருக்கிறது. அந்த இருள் விலகின பிரபஞ்சம் ரத்தம் வழிய தோல் இல்லாமல் கிடக்கும் யானை போல உள்ளது என்ற உவமை குரூரமான ஒரு தரிசனம்

அந்த ஒரு விஷயத்துக்கு அப்பால் செல்ல முடியாமலேயே நின்றுவிட்டேன்

ஆர். சூர்யநாராயணன்