Friday, March 6, 2015

இரு வடிவங்கள்



அன்புள்ள ஜெ,

பூரிசிரவஸின் கதாபாத்திரத்தை வாசித்துக்கொண்டிருக்கையில் அவன் அர்ஜுனனின் ஒரு மறுவடிவம் என்ற எண்ணம் வந்தது. அர்ஜுனனைப்போல ஆனால் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி இல்லாதவனாக பூரிசிரவஸ் இருக்கிறான். அதேபோல பார்க்கும் பெண்களிடமெல்லாம் காதல். பெண்ணிலிருந்து பெண்ணுக்குத் தாவிக்கொண்டிருக்கிறான்.

ஆனால் அர்ஜுனன் ஆண்மையுடனும் திமிருடனும் இருக்கிறான். பெண்களை வெறுக்கிறான். ஆகவே அவன் காமத்தையே அடைகிறான். பூர்சிரவஸ் பெண்களைக் விரும்புகிறான். கனவுகளுடன் மென்மையாக இருக்கிறான். ஆகவே காதலை அடைகிறான். அர்ஜுனனின் வேறு ஒருவகை பாத்திரம் என்று தோன்றியது

நுட்பமான வேறுபாடு. ஆனால் இப்படி இரு கதாபாத்திரங்கள் வழியாக அந்த நுட்பமான வேறுபாடு சுட்டிக்காட்டப்படும்போது அதன் விரிவு அபாரமாக ஆகிவிடுகிறது.

சித்ரா