Wednesday, March 4, 2015

பால்ஹிகரின் வயது



1) வெண்முகில் நகரம் – 23:

பால்ஹிகர் -> சுகேது -> அக்னிதத்தர் -> தேவதத்தர் -> சோமதத்தர் -> பூரிசிரவஸ் 

விக்கிபீடியாவில் பார்த்தபோது  பால்ஹிகர்  -> சோமதத்தர் -> பூரிசிரவஸ் என்று இருந்தது. 

இதை பற்றி தாங்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

2) பால்ஹிகருக்கு  150 வயதிருக்கும் என்று வருகிறது. இணையத்தில் தேடிய போது, 122 வயது வரை வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தது (சான்றிதல் உள்ளது). 


ராஜாராம் சாரங்கபாணி

அன்புள்ள ராஜாராம்

நான் தந்திருப்பது மகாபாரதத்தில் உள்ள வம்சாவளி. பால்ஹிகர் சந்தனுவின் அண்ணா. சந்தனு- விசித்திரவீரியன் - திருதராஷ்டிரன் - துரியோதனன் என்று பார்த்தாலும் காலக்கணக்கை நீங்கள் அறியலாம். பூரிசிரவஸ் துரியோதனனைவிட  இளையவன்

சான்றிதழெல்லாம் எதற்கு? பொதுவாக மலைமக்கள் நீண்டகாலம் வாழ்பவர்கள். 

ஜெ