ஜெ,
வெண்முரசு வெண்முகில்நகரம் முடியும்போது ஒரு முழுமையான பாஸிட்டிவ் நோட்டுடன் முடியும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி முடியமுடியாது என்றும் தெரிந்திருந்தது, ஏதோ ஒன்று நடக்கும் என்றும் தோன்றிக்கொண்டே இருந்தது அதை ஏன் எதிர்பார்த்தேன் என்றால் மனித மனம் அப்படித்தான் என்பதனால்தான்.
ஆனால் அந்தக்கண்தெரியாத சூதர் வந்து வேதங்களைச் சொல்லி கதைசொல்ல ஆரம்பித்ததுமே தெரிந்துவிட்டது, அவர் போரைப்பற்றித்தான் ஏதோ சொல்லப்போகிறார் என்று
அவர் சொன்ன கதை ஒரே சமயம் எதிர்பாராததாகவும் எதிர்பார்த்த உள்ளடக்கம் கொண்டதாகவும் இருந்தது. அவர் சொல்ல ஆரம்பித்ததுமே என்ன இது வேறென்னவோ சொல்கிறார் என்று தோன்றியது. முடித்ததும் ஒரு பெருமூச்சு வந்தது
ஆமாம் இவர்கள் கையில் ஒன்றுமே இல்லை. கலியுகம் பிறக்கப்போகிறது. பிறந்துவிட்டது. துரியோதனனின் பிறப்பில் கலிதேவன் கண்முழித்த கதையை எல்லாம் நாம் வசதியாக மறந்துவிட்டோம். அவனுடைய காலம் இது
ஆகவே துரியோதனன் என்னதான் நல்லவனாக ஆனாலும் அவனுக்கு விதி அளித்தக் கடமையைச் செய்யவேண்டும். அந்தத் தண்டனையை அடைந்துதானே ஆகவேண்டும்?
சிவராமன்