“ஆனால் மூத்த தந்தை பீமசேனர் உடனே சொன்னார், பேரரசியர் கையாளும் அனைத்து இடர்களும் பேரரசியரே உருவாக்குவது என்று.” சத்யபாமை முகம் மாற உடனே அபிமன்யூ “பீமசேனரை நீங்களே அறிவீர்கள், அத்தை. காட்டு மனிதர்” என்றான்
அபிமன்யூவின் இந்தக்குறும்பை
அப்படியே கிருஷ்ணன் முன்பு குந்தியிடமும் காந்தாரியிடமும் செய்ததை நினைவுகூர்கிறேன்.
எப்படி மாமனுக்கு மருமகன் சரியாக வந்து வாய்த்திருக்கிறான் என்ற எண்ணம்தான் எழுந்தது.
கண்ணெதிரில் இப்படி தலைமுறைகள் நிகழ்ந்துகொண்டே இருப்பது ஒரு மகத்தான வாசிப்பனுபவமாக
உள்ளது ஜெ
மனோகரன்