Thursday, December 14, 2017

உச்சங்கள்



அன்புள்ள ஜெ

வெண்முரசு இதுவரை வந்ததில் எனக்குப்பிடித்த பல இடங்கள் உள்ளன. உண்மையில் மொத்தமாக ஒருமுறை நாவலை வாசிக்காமல் முழுமையாகப்புரிந்துகொள்ளவே முடியாது என நினைக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையின் ஒருபகுதியாக உள்ல இந்நாவலில் ஒட்டுமொத்தமாக எனக்குப்பிடித்த உச்சங்கள் என்னென்ன என்று பார்த்தேன். ஆரம்பத்திலிருந்தே சொல்லவேண்டும் என்றால் மழைப்பாடலில் பாண்டு இறந்து மாத்ரி உடன்கட்டை ஏறும் இடம். வண்ணக்கடலில் கர்ணன் துரோணரால் அவமானப்படுத்தப்படும் இடம்.பிரயாகையில் துருபதனின் அவஸ்தைப்படும் இடங்கள் விண்முகில்நகரத்தில் பூரிசிரவஸ் தேவிகையை இழக்கும் இடம் இந்திரநீலத்தில் சாத்யகி நகையைக் களவாண்டு ஓடும் இடம். காண்டீபத்தில் அர்ஜுனன் அரிஷ்டநேமியைக் காணும் இடம். 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இப்படிச்சொல்வது மிகமிகக்குறைவானது என நினைக்கிறேன். இப்படிச்சொல்லும்போது உணர்வுரீதியான இடங்களைச் சொல்கிறேன். ஆனால் வண்ணக்கடலில் அந்த விழாக்களியாட்டத்தில் ஒவ்வொரு அசுரர்களாகக் கிளம்பிவரும் இடம் எனக்கு இதேபோல முக்கியமானது.


ராகவன்