Thursday, December 14, 2017

தெய்வங்களைப்பற்றி



ஜெ

வெண்முரசில் வரும் தெய்வங்களைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். திரும்பத்திரும்ப வருபவை வெவ்வேறு தெய்வங்களைப்பற்றிய தோற்ற வர்ணனைகள். அவை கைகளில் எவற்றையெல்லாம் ஏந்தியிருந்தன, எப்படி பூசை செய்யப்பட்டது, என்னென்ன வகையில் கோயில்கள் அமைந்திருந்தன என்பது.

வெண்முரசில் வரும் தெய்வங்கள் பல நாம் கேள்விப்படாதவை. உண்மையில் இருப்பனவா அல்லது கற்பனையா என்று தெரியவில்லை. அறிந்த தெய்வங்களும் ஏராளம். நாவல் ஓரளவேனும் நிறைவடைந்தபின்னர் எவரேனும் அமர்ந்து தனித்தனியான நூல்களாக தெய்வங்களின் பட்டியலை இட்டால் நல்லது என நினைக்கிறேன். இத்தனை தெய்வங்கள் பயின்றுவரும் ஒரு நூல் வேறு இல்லை. மகாபாரதத்தை விடவும் தெய்வங்கள் அதிகம் இதில்


அருண்குமார்