Monday, December 18, 2017

பெண்கள்


ஜெ

குருதிச்சாரல் தொடக்கத்தை மட்டும் வாசித்துவிட்டேன். எப்படி என்று சொல்லமாட்டேன். உங்கள் தளத்தின் பாஸ்வேர்ட் தெரியும். இந்தநாவல் இதுவரை பேசப்படாத பெண்களின் கதைகளாக இருக்கும் என்று தொடக்கத்தைவைத்தே ஊகித்தேன். பெண்கள் இந்நாவலில் இனிமேல் வரவேமாட்டார்கள் என நினைத்தேன். ஏனென்றால் இனிமேல்போர்தான்.

ஆனால் இந்தநாவலில் பெண்களைக்கொண்டுவந்தது ஒரு பெரிய விஷயம்தான். அதிலும் எங்கும் பேசப்படாத தேவிகை போன்ற பெண்கள். நுட்பமான தொடக்கமாக இருந்தது. குறிப்பாக குருஷேத்ரவர்ணனை. அங்கே இருக்கும் கறையான்புற்றுக்கள். அது ஒரு பெரிய வயிறுபோல ஜீரணித்துக்கொண்டே இருக்கிறது என தோன்றியது. அந்த நாற்றமும் எலும்புகள் புதைந்த மண்ணும் ஒரு கெட்டகனவுபோல ஆரம்பிக்கிறது

சந்திரா