Saturday, December 16, 2017

ஒளியுமிழ்பவை


ஜெ
என் டைரியில் அன்றன்று வாசித்த வெண்முரசின் வரிகளை எடுத்துவைப்பது வழக்கம். இன்று டைரியைப்புரட்டியபோது இந்த வரி அகப்பட்டது

ஒளியுமிழ்பவை ஒளியுண்பவையே.
 ஒளியை முற்றிலும் கடத்துபவை ஒளியில் மறைகின்றன.
ஒளியை முற்றிலும் கடத்தாதவை நிழலில் புதைகின்றன.
ஆகவே இப்புவிக்காட்சி என்பது குறையொளி திகழ்பவற்றின் வலைப்பின்னலே.
நிறைநிலைகொண்டவை பிரக்ஞைக்கு கீழோ மேலோ சென்று மறைந்துவிடுகின்றன.
இரு முடிவிலிகளுக்கு நடுவே
நம் பிரக்ஞையால் அள்ளி எடுத்து
எல்லைவகுக்கப்பட்ட சிறு துண்டுதான் இப்புடவி

ஒரு சாதாரணமான கதையில் இப்படி ஒரு வரி வந்திருந்தால், அல்லது இதையே உடைத்து ஒரு கவிதையாக எழுதியிருந்தால் எத்தனை கவனம் பெற்றிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். வெண்முரசு அதன் பிரம்மாண்டத்தாலேயே உரிய வாசிப்பைப்பெறாமல் போகிறதோ என்று தோன்றியது. ஆனால் ஒரு நல்ல வாசகன் வாழ்நாள் முழுக்க அமிழ்ந்துகிடக்க இந்நாவல்தொகுப்புக்குள் இடமிருக்கிறது


சுவாமி