Sunday, December 10, 2017

மலர்



Dear Sir

தமிழில் உங்களை எப்படி address செய்து கடிதத்தை ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை.ஒரு மாத விடுமுறையில் கடந்த 2ஆம் தேதி வீட்டுக்கு வந்துவிட்டேன். பிப்ரவரியில் நடக்க இருக்கும் இறுதித்தேர்வுக்காக படித்துக்கொண்டும் இரவுகளில் நீண்ட நேரம் அம்மாவிடம் வெண்முரசு கேட்டுக்கொண்டுமிருக்கிறேன். இப்போது மாமலர் கேட்டுக்கொண்டிருக்கிறேன்

மாமல்லர் தேடிச்செல்லும் மாமலர்

புரூரவஸ்கதையில் அவரின் அம்மா காட்டுக்குப்போவதை 
கேட்டுக்கொண்டிருக்கையில் அம்மாவும் நானும் ஒரே சமயத்தில் கண் கலங்கினோம். பலமுறை அம்மா இதை வாசித்திருந்தாலும் எனக்குச்சொல்கையில் புதிதாக சொல்வதுபோல emotional ஆக சொல்லுவார். இன்னும் பல தருணங்களில் இப்படி கண் கலங்கினோம்

ஆயுஷ், என்ன கம்பீரமான ஒரு பாத்திரம், எனக்கு அவரை மிக பிடித்திருக்கிறது. புரூரவஸ் காட்டிற்கு சென்ற அன்று அறையின் ஜன்னல் அருகில்  ஆடை குளிர்காற்றில் படபடக்க நின்று கொண்டு விண்மீன்களை பார்த்துக்கொண்டிருக்கும் சித்திரம் ஷண்முகவேல் அவர்கள் வரையாமலும் என் மனதில் அப்படியே பதிந்து விட்டிருக்கிறது. That was an amazing imagery.

சிறு வாழ்வு, சிறு வாழ்வு என ஆயுஷ் மீண்டும் மீண்டும் நினைக்கையில் நான் என் பள்ளியில் எங்களுக்கு spiritual வகுப்பில் காண்பித்த ஒரு வீடீயோவை நினைத்துக்கொண்டேன்.  Carl sagen அவர்களின் ’’pale blue dot ’’ வீடியோவில் நம் பூமி எத்தனை எத்தனை சிறீயது அதில் நாம் எங்கிருக்கிறோம் இத்தனை சின்னஞ்சிறிய ஒரு நீலப்புள்ளியில் தான் அத்தனை சண்டைகள், இரத்தம், கொடுமைகள், வாக்குறுதிகள் ,ஏமாற்றங்கள், வலிகள் மகிழ்ச்சிகள் என்று பார்த்தோம்
அந்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லை எனில் ஒருமுறை பாருங்கள். அஜிதன் அண்ணாவையும் அவசியம் பார்க்கச்சொல்லுங்கள்

விஷ்னுபுரம் விழாவில் உங்களையும் மற்ற அனைவரையும் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்

மிக்க அன்புடன்
அ.சரண்