ஜெ
விதுரரின் வர்ணனை மனதை வருந்தச்செய்தது
விதுரர் நோயுற்று, மெலிந்து, அகவை மிக முதிர்ந்த தவமுனிவர் போலிருந்தார். கண்கள் குழிவிழுந்து உள்ளே செல்ல, வாய் வற்றியிருந்தமையால் பற்கள் உந்தி வெளிவந்திருக்க, கரிய சிற்றுடலுடன் அனைத்துப் பொலிவையும் இழந்து, அணிந்திருந்த அப்பட்டாடையும் அருங்கல்மணிமாலையும் இல்லையென்றால் எவரும் பட்டினியில் தவித்து அன்ன விடுதி நோக்கிவரும் எளிய சூதன் என்று எண்ணும்படி இருந்தார்.
காந்தியின் கடைசிநாட்களைப்பற்றி வாசித்தது போல இருக்கிறது. எல்லா காலகட்டத்திலும் நன்மையை நாடுபவர்கள், நடுநிலைவகிப்பவர்களுக்கு இதுதான் கடைசிநிலை என்று தோன்றியது.
அதேசமயம் இப்படி ஒரு போர் வரவேண்டும் இதைப்போல ஒரு போர்வந்தால்தான் பாரதவர்ஷத்தின் அதிகாரச்சமநிலை சீரடையும் என்றெல்லாம் பேசிய மழைப்பாடலின் விதுரன் என்ற அந்த சுருசுருப்பான இளைஞனும் ஞாபகம் வந்துகொண்டுதான் இருக்கிறான்
சரவணன்