இது சலன் அரசவை பற்றிச் சொல்வது. மிகச்சரியாக
இது இன்றைய கார்ப்பரேட் விருந்துகளுக்குப் பொருந்தும். அங்கே ஒருநாள் போன ஒருவன் வாழ்நாள்
முழுக்க முன்னேறுவதைப்பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருப்பான். அங்கே பொய்யான ஒரு சமத்துவம்
இருக்கும். ஆனால் அந்தச் சமத்துவத்தினால் பொருளில்லை. மேலே யார் கீழே யார் என்பது சரியாக
அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். கீழிருந்து மேலே சென்றவர்கள் தனியாகத் தெரிவார்கள்.
இந்த விருந்துகள் வழியாகத்தான் சாட்டை நமக்குப்பின்னால் சுழன்றுகொண்டே இருக்கிறது
ஸ்ரீகாந்த்