Monday, July 9, 2018

சகோதரர்கள்



எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் !
 இராமாயணத்தில் இராவணனின் சகோதரர்கள் இருவர் கும்பகர்ணன் மற்றும் விபிஷ்ணன் . ஸ்ரீராமனுடன் யுத்தம் எனவரும் போது இவர்கள் இருவரும் எடுத்த  நிலையோ வேறு வேறு .கும்பகர்ணன் ,ராவணன் நீ சீதை விஷயத்தில் மாபெரும்தவறு செய்துவிட்டாய் , அறமில்லாது பெண் பிழை செய்து குலநாசத்தை ஏற்படுத்தி விட்டாய் என பலவாக தனதுதனயனை கடிந்து பேசிவிட்டு ,ஆனாலும் நான் உன் பக்கம் நின்று ஸ்ரீராமனுடன் போர் புரிவேன் என சூளுரைத்தான் .ஸ்கந்த புராணத்திலும் கூட சூரபத்மன் தம்பி சிங்கமுகாசூரன் தனது தனயன் சூரபத்மன் தேவர்களை சிறை வைத்ததுதவறுஅவர்களை விடுதலை செய்து சிவகுமாரனுடனான யுத்தம் தவிர்ப்போம் என அறம் எடுத்துரைத்து ,அதனை சூரன்கேட்க மறுத்த பின்பும் செஞ்சோற்று கடன் கருதி ,சூரன் பக்கம் நின்று முருகனுடன் போர் புரிந்தான்
ஆனால் விபிஷ்ணன்  ராவணனிடம் நீ அடுத்தவரின் மனைவியை அபகரித்தாய் ,அது தவறென உரைத்து சீதையைராமரிடம் திருப்பி ஒப்படைக்க நான் கூறியதை நீ கேளாததால் நான் உன்னை விட்டு நீங்கி போரில் ஸ்ரீராமர் பக்கம்நிற்ப்பேன் என முடிவெடுத்து நின்றார் . ஆம் .செஞ்சோற்று கடனா ? அறமா என்று கேள்வி எழும்போது செஞ்சோற்றுகடன் என கும்பகர்ணனும் ,அறமே என விபீஷணனும் எதிர் நிலைகளில் முடிவெடுத்து நின்றனர்இங்குமகாபாரதத்திலும் விகர்ணன் ,மற்றும் குண்டாசி ஆகியோர் துரியோதனன்,அரக்கு மாளிகையில் பாண்டவர்களைஎரிக்க முயன்றது மற்றும் பன்னிரு சூது களத்தில் திரௌபதிக்கு நிகழ்ந்த மான பங்கம் ஆகிய நிகழ்வுகளால் தனயனைவெறுத்தாலும் ,பாண்டவர்களுடன் போர் என்றொருநிலை வந்தபோது செஞ்சோற்று கடன் பெரிதென துரியோதனன்பக்கம் நின்றனர் - கும்பகர்ணன் போல .ஆனால் திருதராஷ்டிர யுயுத்ஸு அறமே பெரிதென பாண்டவர்கள் பக்கம் நின்றுபோரிடுவது என முடிவெடுக்கிறான் - விபிஷ்ணன் போல .ஸ்ரீராமரை சரணடைந்த விபிஷ்ணனை ஏற்று கொண்டார்சீதை நாயகன் .ஆனால் யுதிஷ்டிரரை நாடி வரும்  யுயுத்ஸுவை அவர் தங்களது அணியில் சேர்த்து கொள்வாரா ?அதனை இளைய யாதவர் ஏற்பாரா என்பதை வெண் முரசு தான் விளக்க வேண்டும் .
நன்றி ஜெயமோகன் அவர்களே !
தி செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்