ஜெமோ
வெண்முரசு நாவல்களிலேயே விரைவான கதையோட்டம் கொண்ட நாவல் இது.
இதில் நிகழும் செய்திகளை மகாபாரதத்தில் காணமுடிவதில்லை. அவை மிக சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன.
விகர்ணன் ஏன் துரியோதனனின் பக்கமே நின்றான் என்பதைக் காணமுடியவில்லை. நேராகவே போருக்குச்
சென்றுவிடுகிறது மகாபாரதம். ஏனென்றால் அது ஜய என்றபேரில் போர்மட்டுமே கதையாக எழுதப்பட்டது.
முன்னும்பின்னும் உள்ளவை பின்னாடி எழுதிச் சேர்க்கப்பட்டவை. ஆகவே வியூகங்களும் சூழ்ச்சிகளும்
அதில் கூடுதலாக இல்லை. இதில் எல்லாமே எப்படி இயல்பாக ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பது
நுணுக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொருவரையும் அணுக்கமாகத் தெரிந்துகொண்டே போருக்குச்
செல்கிறோம்
செந்தில்