Sunday, March 8, 2015

தனித்த மலைகளில் இருந்து..






ஜெ

வெண்முரசின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று இந்த பூரிசிரவஸ். வழக்கம்போல மகாபாரதத்தின் ரொம்பச்சின்ன கதாபாத்திரம் ஒன்றை எடுத்துப் பெரிசாக்கிவிட்டீர்கள். இந்தக்கதாபாத்திரத்தை நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. நுணுக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. அவ்வளவு பெரிய வீரன் இல்லை. உறுதியான ஆளுமை இல்லை. பெண்ணுக்குப்பெண் தாவுகிறான். ஒரு வகையான ரொமாண்டிக் இடியட் மாதிரி இருக்கிறான்

ஆனால் மிகப்பெரிய ராஜதந்திரியாகவும் சொல்வல்லவனாகவும் இருக்கிறான். இதுவரை வந்த எல்லா ராஜதந்திரிகளும் உறுதியானவர்கள். மேட்டர் ஆஃப் பேக்ட் ஆன மனிதர்கள். இவன் அவர்களுக்கு முற்றிலும் வேறுமாதிரி இருக்கிறான். இவனுடைய குணச்சித்திரமே வேறுபோல இருக்கிறது

இளமையிலேயே எல்லாவற்றையும் எப்படியோ அறிந்து வைத்திருக்கிறான். ஆனால் பெரிய சூழ்ச்சிக்காரனாகவும் தெரியவில்லை. தீமையை எதிர்கொள்ளக்கூடிய மன உறுதி இருக்கிறதா என்றும் தெரியவில்லை. கொஞ்சம் லவ்வபிள் ராஸ்கல் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்

ஏனோ எனக்கு இவனைத்தான் அதிகம்பிடித்திருக்கிறது

சாமிநாதன்