Sunday, March 8, 2015

தருமனின் அச்சம்



பயம் - அது ஒரு உணர்வு. ஆனால் அதற்கு காரணம் என்று ஒன்றிருக்கும். அதை நாம் அறிந்ததோ அறியாமலோ இருப்போம். அப்படி தருமனின் இடத்திலிருந்து யோசிக்க வேண்டியுள்ளது. இத்தனை நாள் நமக்கு தெரிந்த தருமணின் கதாப்பாத்திரத்திலிருந்து நாம் புரிந்துகொண்டதை வைத்து கொண்டு தருமனின் பயத்தை ஆராயவேண்டியிருக்கிறது.

முதல் முறை அவன் பாஞ்சாலியை கோவிலில் பார்க்கும் போது பாஞ்சாலியே வியக்கும் அளவுக்கு அவன் கண்ணில் சிறு துளி அச்சம் கூட தெரியவில்லை. அப்படி எந்த ஆன் மகனும் இருக்கமுடியுமா என்று வியக்கிறாள். மாயை அவனில் ஒரு தாயை பார்ப்பதாக கூறுகிறாள். ஒரு வேலை அப்படி இருக்கும் தருமனுக்கு காமம் என்ற நிலைக்கு வரும் போது தன்னுடைய பிம்பம் மாறப்போகிறதோ என்ற பயம் இருக்குமோ? அவனுடைய சுய வாழ்க்கை நெறிகளை அங்கு சமரசம் செய்ய நேர்கிறதோ?

போதுவாக மதுவை முகர்ந்து கூட பார்க்காதவர்கள் சொல்லும் ஒரு காரணம் ஒன்று உண்டு. அதை குடித்தால் அதிலேயே அடிமையாகி விடுவேன் அதனால் தான் குடிப்பதில்லை என்பார்கள். சிரிப்பாக இருக்கும் ஆனால் அது தான் அவர்களின் அச்சம். மதுவின் மீதான அச்சமில்லை தன் மீதான அச்சம். அதே போல் தருமன் இங்கு கடலில் மூழ்கி போகும் படிமமும் அதை தான் குறிக்கிறது. அப்படி நடக்க நேரிடும் என்று அவன் அஞ்சுகிறான்.

அவன் கண்ணுக்கு முன்னாலேயே அதற்கான உதாரணம் அர்ஜுனன் இருக்கிறான். தருமன் அர்ஜுனனை போல் ஆகி விட கூடாது என்று அஞ்சுகிறான் போலும். இருந்தும் அவன் ஆழ்மனம் விரும்புவது அதையே.  அதுவே அவன் ஒப்பனையின் மூலம் உடலில் வெளிப்படுகிறது.

ஹரீஷ்
குழுமத்தில்