Saturday, March 7, 2015

உரித்த மாடு



ஜெயமோகன் அவர்களுக்கு,

ஒரு வாசகர் உரித்த யானை பற்றி எழுதியிருந்தார். உண்மையில் அதை நான் அவர் எழுதியபிறகுதான் கவனித்தேன். இப்படியெல்லாம் வாசிப்பதற்கான பயிற்சி நமக்கில்லை. ஆகவே நாம் மேம்போக்காகக் கதையைமட்டுமே வாசித்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம். ஆகவே நமக்கு பெரிதாக ஒன்றும் சிக்குவதில்லை. நானெல்லாம் நீண்டநாள் சிற்பங்களைப்பார்ப்பதற்காக கோயில் கோயிலாகச் சென்றவன். இப்போதுதான் ஒரு தெளிவை அடைந்திருக்கிறேன் என நினைக்கிறேன்

ஆனால் இப்படி சிற்பமும் கனவும் ஒன்றாகக் காலக்கும் தியான அனுபவம் எனக்கு இல்லை. அகாவே இந்தமாதிரி பகுதிகளை நுணுக்கமாக வாசிக்கமுடியவில்லை. இந்த வாசகர்களைப்போன்றவர்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி எழுதும்போது பெரிய நிறைவு ஏற்படுகிறது

பீமன் இடும்பவனத்தில் மாடு உருப்பதை பார்க்கும் இடமும் நினைவுக்கு வந்தது

கே.சிவலிங்கம்