அன்புள்ள ஜெ,
பால்ஹிகர் மண்ணுக்கு அடியிலிருந்து கிளம்பி வருவதைப்பற்றி ஒருவர் எழுதியிரிந்தார். அதை வாசிக்கும்வரை எனக்கு அந்தக்கோணத்திலேயே யோசிக்கத் தோன்றவில்லை. அவர் மேல் வெயில்படாது என்பதிலும் ஒரு நுட்பம் உள்ளது என்று பிறகு தோன்றியது. ஏனென்றால் அவரது தமையன் தேவாபிக்கு வெயில் படக்கூடாது என்ற நோய்தான். இவர் அவரை தூக்கி அலைந்தார்
ஆனால் திடீரென்று இவர் தேவாபியாக ஆகிவிட்டார். இவருக்கு அண்ணனின் நோய் வந்துவிட்டது. அப்படியே மண்ணுக்கு அடியிலே போய்விட்டார்.அங்கே இருந்தவ்ர்மீண்டும் பால்ஹிகராக ஆகி பால்ஹிகநாட்டுக்குப்போகிறார். இிந்த மர்மமும் ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனைபலசாலிக்கு உள்ளே அப்படிப்பட்ட ஒரு நோயாளி ஒளிந்துகிடந்திருக்கிறார். அத்தனை வருடங்கள் கடந்து அவர் வெளியே வந்திருக்கிறார்
பால்ஹிகரின் வர்ணனை மிகவும் இயல்பாக இருப்பதனால் அதை நம்மால் ஒரு குறியீடாக வாசிக்கமுடியாமலாகிறது என்று நினைக்கிறேன். இப்படி ஒரு வாசிப்பை ஒருவர் தொடங்கிவைக்கும்போது அது அப்படியே நமக்குள்ளும் வந்துவிடுகிறது
ஜெயந்தி