Tuesday, March 10, 2015

குதிரைகளும் மனிதர்களும்



ஜெ

வெண்முரசில் வரும் குதிரை வர்ணனைகளை எவராவது தனியாகத் தொகுக்கலாம் என்று தோன்றியது. நான் வெட்டி வெட்டி வைத்தேன். ஆனால் விட்டுவிட்டேன். வந்துகொண்டே இருக்கிறது. குதிரைகள் எவையும் யானைகள் போல தனியான பெயர் மற்றும் அடையாளத்துடன் இன்னமும் வரவில்லை. ஆனால் குதிரைகளின் நடததை உடலசைவுகள் வாசனை எல்லாமே வந்துகொண்டே இருக்கின்றது

மலைகளில் இருந்து விரிந்த நிலத்தில் தனியாக பூரிசிரவஸ் குதிரையில் வரும் காட்சியை அப்படியே கனவுபோல காணமுடிந்தது. அந்தக்குதிரை அவன் மனசைப்புரிந்துகொண்டு அப்படியே செல்கிறது. குதிரையைப்பற்றிய நகுலனின் பெரிய வர்ணனைக்குப்பிறகு அதைப்படிக்கையில் மனம் எழுச்சிகொண்டது

அப்படி ஒரு மிருகத்துடன் ஆழமான மானசீக உறவு கொள்வது என்பது பெரிய கொடுப்பினை. நவீன காலத்திலே நாம் இழந்ததே குதிரையுடன் மனிதனுக்கு இருபதாயிரம் வருசமாக இருந்துவந்த உறவைத்தான் இல்லையா?

அருண்