Friday, April 15, 2016

அந்த இருள்



திகைத்த விழிகளுடன் வாய்திறந்து அமைந்திருந்த தலைகள் ராஜகிருஹ நகரை அச்சுறுத்தி ஆழ்ந்த அமைதிக்கு தள்ளின. அன்று உச்சிப்பொழுதிலும் சூரியன் எழவில்லை. நகரே இருண்டு குளிர்ந்து கிடந்தது.

ஜெ

இந்த வரி எனக்கு பயங்கரமான ஒரு நினைவலையை உருவாக்கியது. நான் டெல்லியில் வேலைபார்த்தகாலகட்டத்திலேதான் இந்திராகாந்திக் கொலையும் அதைத்தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களும் நடந்தன. அக்கலவரங்களில்  ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டார்கல்

அப்போது நான் பகல் முழுக்க ஒருவிதமான இருள் மூடிவிட்டதுபோல உணர்ந்தேன். எனக்கு அந்த நாளே புகையால் இருண்டதுபோல ஒரு மனப்பிராந்தி. நண்பர்களிடம் கேட்டபோது அவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது என்றார்கள்

எவ்வளவு நுட்பமான ஒரு அவதானிப்பு

ஸ்ரீனிவாசன்.