Wednesday, April 13, 2016

எலிமெண்டல் பவர்





அன்புள்ள ஜெ

ஜராசந்தனின் கதாபாத்திரம் வெய்யோன் முதல் துலங்கி வருகிறது. அதீதபுத்திசாலித்தனம், குதர்க்கபுத்தி, கோமாளித்தனம், கொலைவெறி, அதிகாரமோகம், உலகத்தையே அழிக்கும் ஆற்றல் எல்லாமே

நீங்கள் முன்பு ஒருமுறை சொல்லியிருக்கிறீர்கள். ஜெர்மானிய கவி கதே பிரெஞ்சு அரசர் நெப்போலியனை எலிமெண்டல் பவர் என்று அழைத்தார் . புயல் உருவாகிவருவதைப்போல ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி பெருகிப்பெருகி வருகிறார்கள் இவர்கள்

இவர்களில் இருக்கும் அந்த கலவை பயங்கரமானது. உலோகத்தைவிட உலோகக்கலவைகள் பலமானவை என நான் எஞ்சீனியரிங்கில் படித்தேன். அதைத்தான் நினைவுக்கு வருகிறது. வீரன் காட்டுமிராண்டி என்ற கலவை அர்ஜுனனையும் பீமனையும் விட வலுவானது

அரசு ராஜேந்திரன்