Monday, April 18, 2016

கர்ணன் வருகை:


இன்றைய பன்னிரு படைக்களத்தின் முதல் வரியைப் படித்ததுமே ஒரு உற்சாகம், ஆசுவாசம் வந்தது. முன்பு பிரயாகையில் பீஷ்மரின் வருகைக்கு ஒப்பான நிகழ்வு இது. வெண்முரசில் கர்ணன் எப்போதுமே பீஷ்மருக்கிணையாகவே வர்ணிக்கப் படுவான். இன்று எந்த வர்ணனையும் இல்லை. ஆனால் மனது இயல்பாகவே அவரோடு இணைத்துக் கொண்டது.(உண்மையில் "அஸ்தினபுரியின் எல்லைக்குள் கர்ணன் நுழைந்தபோது" என்பதைப் படித்தவுடன் 'வா தலைவா வா' என்று தான் மனது கூவியது. எல்லாம் நேற்றைய 'தெறி' எஃபெக்ட்.... இன்னும் காது வலிக்குது...😊

அருணாச்சலம் மகாராஜன்