ஜெ
வெண்முரசின் இந்தப்பகுதியில் வணிகர்களைப்பற்றி வரும் நுட்பமான அவதானிப்பை வியந்தேன். பொதுவாக கலவரங்கள் மக்கள் எழுச்சி ஆகியவை நிகழும்போது வணிகர்களும் சேர்ந்துகொள்கிறார்கள். அதுவரை அவர்கள் அப்படி மக்களுடன் சேர்ந்துகொள்பவர்கள் அல்ல. ஆனால் அபோது அவர்கள்தான் முனனணியில் நிற்பார்கள். சென்னை வெள்ளத்தின்போதுகூட அவர்கள்தான் எல்லாவற்றையும் செய்தார்கள்
இந்தமனநிலையை மகதத்திலும் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. அந்த மனநிலைக்கான காரணமும் ஆச்சரியம். அவர்கள் மக்களிடமிருந்து விலகமுடியாது. அதேசமயம் மக்களில் ஒருவராகவும் இருக்கமுடியாது. இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் மக்களில் ஒருவராக நின்று அந்தப்பிரச்சினையில் பங்குகொள்வது அந்தச்சமநிலைக்கு அவர்க்ளுக்கு உதவுகிறது
முருகேஷ்.