Wednesday, November 1, 2017

மாளா இளமை



அன்புள்ள ஜெ,

கிருஷ்ணனின் மாளா இளமையை பிரலம்பன் காணும் இடம் நுட்பமானது. அவன் காலத்துக்கு அப்பால் நின்றிருப்பவன். கணந்தோறும் அறைந்துசெல்லும் காலப்பெருங்கடலை அறியாத கரைப்பாறை என்றவரி மிக அரிய ஒன்று. கிருஷ்ணன் கதைப்படி இப்போது எழுபதை நெருங்கிக்கொண்டிருக்கிறார். அவர் மகன் மைந்தன் அனிருத்தனுக்கே பதினாறுகடந்திருக்கிறது. ஆனாலும் அவர் கிசோரகராகவே நீடிக்கிறார். கனிந்த ஞானியும் சிறுவனுமாக ஒரே சமயம் இருந்துகொண்டிருக்கிறார். அவருடைய அந்த விளையாட்டுத்தனம் மென்மையாக இருந்துகொண்டே இருக்கிறது. அதன் அளவு மட்டும் மாறிவிட்டிருக்கிறது. நாவல்களின் தொடக்கத்தில் விளையாட்டுமட்டுமாக வந்த சிறுவனா இவர் என்றும் தோன்றுகிறது. அச்சிறுவன் சற்று எஞ்சியிருப்பதையும் காணமுடிகிறது

ஈஸ்வரன் எஸ்.ஆர்