Friday, July 6, 2018

துரியோதனனின் பேச்சு




ஜெ

வெண்முரசில் உள்ள சபைப்பேச்சுக்களில் சிறந்தவை துரியோதனன் சொல்பவைதான். முன்பு கண்ணன் தூது வந்த சபைகளில் அவன் பேசியவையும் அற்புதமான சொல்லாட்சிகளுடன் மறுக்கமுடியாத தர்க்கங்களுடன் இருந்தன. ஆனால் பிறரைப்போல உவமைகளை அவன் பயன்படுத்தவில்லை. நேரடியான தர்க்கம் உடனே உணர்ச்சிப்பெருக்கான சொற்கள். நான் பார்த்தவரை இந்த மாதிரி நெகெட்டிவ் கதாபாத்திரங்களுக்குத்தான் வஞ்சினத்தைச் சிறப்பாக எழுதுகிறார்கள் எழுத்தாளர்கள். கம்பராமாயணத்தில் ராவணனின் வஞ்சினம் அளவுக்கு எதுவும் வலிமையானதாக இல்லை. நேகெட்டிவ் ஆன உணர்ச்சிகளின் வேகம் பாஸிட்டிவான உணர்ச்சிகளுக்கு இல்லையோ என்று தோன்றியது. அல்லது நெகெட்டிவானவை அந்த ஆற்றலால்தான் நிலைகொள்கின்றன. அவற்றுக்கு இயல்பான சர்வைவல் கிடையாது. துரியோதன்ன் அறிஞனோ கவிஞனோ அல்ல. அவன் எங்குமே பெரிய பேச்சு பேசவில்லை. ஆகவே அவன் கலியால் ஆட்கொள்ளப்பட்டான் என்று காட்டி இவற்றைப் பேசவைக்கிறீர்கள். நல்ல உத்தி.

ராஜசேகர்