அன்பு ஜெமோ சார்,
குண்டாசி காந்தார அன்னையரனைவருக்குமே சம்படையை நினைவுறுத்துபவன். காந்தார சகோதரிகளில் சம்படை.... அஸ்தினபுரியில் இயல்பு வாழ்க்கை
வாழவே இயலாமல் சகுனியிடம் காந்தாரத்திற்குச் செல்ல இறைஞ்சியவள்; பெருந்துயர் சாளரத்தினுள் தஞ்சமானவள்; இளையயாதவனுடனான உரையாடலுக்குப் பின் மரண மீட்பு பெற்றவள். அவள் பெற்ற குண்டாசி கெளரவ நூற்றுவரில் தனியன், தனித்துழலும் அவனின் தத்தளிப்பு வெண்முரசில் தனிக் குறுநாவல்.
இரா.சிவமீனாட்சிசெல்லையா.