Friday, November 23, 2018

அமங்கலம் 3



ஜெ

அமங்கலமாகப் பாடுவதைப்பற்றி இருவர் எழுதியிருந்தார்கள். நான் கேரளத்திலே பணியாற்றியபோது கொடுங்கல்லூர் பூரப்பாட்டை கேட்டிருக்கிறேன். அது போருக்குப் போவதுபோலத்தான் இருக்கும். கைகளில் தடிகளும் ஆயுதங்களும் வைத்திருப்பார்கள். சிவந்த ஆடைகள் அணிந்திருப்பார்கள். கூச்சலிட்ட்படி கெட்டவார்த்தைப்பாடல்களைப் பாடியபடி செல்வார்கள். அதற்கு படையணி என்றுதான் பெயர். நான் விசாரித்தபோது பழங்காலத்தில் போருக்குச் செல்லும்போது அந்த கெட்டவார்த்தைப் பாடல்களைப் பாடுவதுண்டு என்றார்கள். காதுகூசும் கெட்டவார்த்தைகளாலான பாட்டுகள் அவை. முந்நூறாண்டு பழமைகொண்டவை. படைகளில் இப்படி கெட்டவார்த்தைப்பாட்டு பாடுவதென்பது ஒரு வழக்கமாகவே இருந்திருக்கிறது

எம்.சிவானந்தம்