Monday, November 26, 2018

பீஷ்மர் படுகளம்




அன்புள்ள ஜெ

பீஷ்மரின் வீழ்ச்சி பற்றிய போர்ச்சித்தரிப்பு படிப்படியாக பல நிலைகளாக வளர்ந்து வந்தபோது கைநடுங்க வாசித்துக்கொண்டு வந்தேன். அவரும் சிகண்டியும் அன்றுதான் அந்த நாள் என உணர்ந்து புத்தாடை அணிவது. அந்தத் தருணத்தை வேண்டுமென்றே தவிர்த்து அவர்கள் போர் செய்வது. பீஷ்மர் கடைசிநாளில் கொள்ளும் பயங்கரமான போர்வெறி. அவருடைய கொலைத்தாண்டவம். தற்செயல்போல அவர்கள் சந்தித்துக்கொள்வது. சிகண்டி முன்னால் வந்ததும் பீஷ்மர் போரைநிறுத்திவிட்டு உயிர்கொடுப்பது. அர்ஜுனனின் துயரம். எல்லாமே படபடப்பூட்டும்படி இருந்தன. நன்றாகத்தெரிந்த ஒரு கதைச்சந்தர்ப்பத்தை இத்தனை உளவியல் நாடகத்துடன் எழுதி இவ்வலவு விரிவாகக் காட்டுவது பிரமிப்பூட்டுவதுதான்

ராஜேஷ் பத்மநாபன்