Sunday, November 25, 2018

குடித்தெய்வம்




அன்புள்ள ஜெ

க்ஷேமதூர்த்தியின் அல்லாட்டம் ஆரம்பம் முதலே சொல்லப்பட்டுவந்ததை போர்க்களத்தில் அவர் மாறிக்கொண்டே இருந்ததை வாசித்தபின்னர்தான் வாசித்தேன். அரசர்களுக்கான சபையிலும் அவர் குடிமேன்மையைப் பேசிக்கொண்டே இருக்கிறார். அவர் தனக்காக குடிமேன்மைக்கு ஒரு சித்திரத்தை, ஒரு கதையை வைத்திருக்கிறார். அந்த இடத்தை அவருக்கு சத்ரியர்கள் கொடுப்பதில்லை. அது அவருக்கும் தெரியும். அதை எப்படியாவது அடைவதற்காகவே முயற்சிசெய்கிரார். அவருடைய அந்தராத்மாவான அல்லது ரகசிய ஆசையான அந்த குடித்தெய்வமும் கூடவே கிடந்து அலைமோதுகிறது, பாவம்

ராஜ்