Thursday, November 15, 2018

துரியோதனனின் பெருந்தன்மை



ஜெ


மீண்டும் மீண்டும் துரியோதனனின் பெருந்தன்மையைத்தான் வெண்முரசு காட்டிக்கொண்டிருக்கிறது. போர்வெற்றியைக்கூட பெரிதாகக் கருதாதது அந்தப்பெருந்தன்மை. காரூஷநாட்டு க்ஷேமதூர்த்தியை அவன் விட்டுவிடுவதையும் கடைசிவரியில் அதற்கான காரணத்தையும் பார்க்கும்போது மாமன்னன் என்ற எண்ணம் ஏற்படுகிறது

க்ஷேமதூர்த்தி சின்ன மனிதர். சின்ன மனிதர்களுக்கு சின்னத்தனங்கள் இருக்கும். அதை பெரிய மனதுடன் மன்னிப்பதனால்தான் சக்கரவர்த்திகள் உருவாகிறார்கள். ஏன் துரியோதனனுடன் அத்தனைபேர் நின்றார்கள் என்றால் இதனால்தான் என தோன்றுகிறது

ராமச்சந்திரன்