Sunday, November 11, 2018

யாழும் வில்லும்


ஜெ

தேவர்களும் கந்தர்வர்களும் யக்ஷர்களும் போரிடும்போது அவர்கள் அடையும் மாற்றம் பற்றியது ஒரு பெரிய கற்பனை. யட்சர்கள் இசைமீட்டுபவர்கள். ஆனால் இங்கே அவர்கள் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள் போரில் அவர்கள் உருமாறிவிட்டிருக்கிறார்கள் 

நூற்றெட்டு நரம்புள்ள பேரியாழ் நூற்றெட்டு அம்புகளை தொடுக்கும் நூற்றெட்டு நாண்கள் இழுத்துக்கட்டப்பட்ட வில்லென ஆனதென்ன? வேய்குழல்கள் வேல்கள். வீணைகள் விற்கள். கொம்புகள், முழவுகள், முரசுகள், துந்துபிகள், சங்குகள், மணிகள் அனைத்துமே கொலைப்படைகளென மாறிவிட்டிருக்கின்றன. 

அவர்களின் கையிலிருப்பது வில்லாகவோ யாழாக்வோ மாறுவது நாம் செய்வதை ஒட்டித்தான். இது திருவிழா என்றால் அவை எல்லாம் யாழாகத்தான் இருக்கும் இல்லையா?

ராமச்சந்திரன்