Saturday, November 17, 2018

வஞ்சம்




ஜெ

இன்றைக்கு வந்த அத்தியாயத்தில் முதல்முறையாக ஒரு குறிப்பிட்ட விஷயம் வருகிறது. பீமனுக்கு மிக அணுக்கமான விசோகனின் கண் வழியாக. இதுவரை பீமனின் தணிக்கமுடியாத வஞ்சம்தான் சொல்லப்பட்டது. ஆனால் விசோகனின் பார்வையில் உண்மையில் பீமனிடம் அவ்வளவுபெரிய வஞ்சம் இல்லை. ஆகவேதான் அவனால் எத்தனை கொலை செய்தாலும் சினம்தணியாமல் மேலும் கொல்லமுடிகிறது. அந்த சினமும் ஒரு நடிப்புதான். தன்னைத்தானே ஊக்கிக்கொண்டு அடைவதுதான். வஞ்சம் மிகச்சீக்கிரமே அணையும். ஒருவன் மேலும் ஆழமான ஸ்பிரிச்சுவலான காரணத்துக்காக ஒன்றைச் செய்வான் என்றால்தான் அது தொடர்ந்துசெய்யமுடியும். அது பாஸிட்டிவ் ஆக இருக்கலாம், அல்லது நெகெட்டிவாக இருக்கலாம். ஆனால் அதுக்கும் இந்த புறவுலகுக்கும் சம்பந்தமே இருக்கக்கூடாது. அவன் உடலில் ஒரு ஊனம் போல உள்ளத்தில் ஒரு கோணலாக அது இருந்தாகவேண்டும்

ஆர்.மகாதேவன்