Monday, March 9, 2015

போர் இயந்திரங்கள்




1. ஆவசக்கரங்கள்
"படகுகளுக்குள் அமர்ந்துகொண்டு வீரர்கள் ஆவசக்கரங்களை இயக்கினர். பதினெட்டு தொகைகளாக எரியம்புகள் எழுந்து காடுகள் மேல் விழுந்தன"

2. சதக்னிகள்
"சதக்னிகள் ஓசையுடன் வெடித்து எரியுருளைகளை காடுகள் மேல் பொழிந்தன."
"சதக்னிகள் எட்டும் தொலைவு வந்ததும் எரியுருளைகள் எழுந்து சென்று துறைமேடையில் விழுந்து அனல்பொறிகள் சிதற வெடித்தன."

இவைகளுக்கு எனக்கு தேடி சரியான அர்தம் கிடைக்கவில்லை.
இவைகளும் மேலும் எதுவும் போர், ஆயுதங்கள் சம்பந்தமான வார்த்தைகள் இருந்தால் இங்கு அர்த்தம் தெரிவிக்க முடியுமா?

நன்றி
வெ. ராகவ்


அன்புள்ள ராகவ்,

ஆவம் என்றால் அம்பு. அம்புகளை தொடுக்கும் சக்கரங்கள்.

சதக்னிகள் என்று மகாபாரதம் சொல்கிறது. அதற்கு அனல் உமிழும் இயந்திரங்கள், ஒருவகை பழங்கால பீரங்கிகள் என விளக்கம் அளிக்கிறார்கள். கொழுப்பு கந்தகம் போன்ற எரியும் பொருட்களைக்கொண்டு வெடிக்கவைத்து அனலுருளைகளை எய்யும் குழாய்களாக இருக்கலாம்

ஜெ