Monday, March 9, 2015

மீண்டும்போர்



ஜெ

மீண்டும் ஒரு போர் வரப்போகிறது. இதுவரை சிறிதும் பெரிதுமான பல போர்கள் வெண்முரசில் வந்திருக்கின்றன. துருபதனின் படைகளும் பாண்டவர்களும் செய்தபோரும் மதுராவைப்பிடித்த போரும்தான் மிகப்பெரியவை. இந்தப்போர்கள் எல்லாமே நுட்பமாக வெவேறாக எழுதப்பட்டுள்ளன. ஒரு போர் போல இன்னொன்று இல்லை. தரைப்படைப்போர் என்று துருபதன் போரைச் சொல்லலாம். மதுராபோர் என்பது கடல்போர். இந்தப்போரை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை. இத்தனைபோர்களுக்குப்பின்னர்தான் குருஷேத்ர போர் வரப்போகிறது என்று நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது

முதன்முதலாகப்போருக்குப்போகும் மலைநாட்டு இளவரசனின் பரபரப்பும் திமிரும் எல்லாம் அற்புதமாக வந்திருக்கிறன. கவசம் அணிந்ததும் அவனுக்கு வரும் கெத்து ஒரு பெரிய உளவியல்நுட்பம். சீருடை அணிந்ததுமே அந்த மாதிரி அந்தத் தொழிலுக்கு தேவையான மன்நிலை அமைந்துவிடுவதை நானே பார்த்திருக்கிறேன்

அருண் பெரியசாமி