அன்புள்ள ஜெ,
என் போன்ற 
இடப்பற்றாக்குறை உள்ள புத்தகவிரும்பிகளுக்கு கிண்டில் நிச்சசயம் ஒரு 
வரவேற்கத்தக்க உபகரணம். நான் சிறிது சிறிதாக ஆங்கில புத்தகங்கள் அனைத்தயும்
 ஏறக்கட்டிவிட்டேன். தமிழில் இப்போதைக்கு கிழக்கு மட்டுமே இதில் 
முனைப்புடன் இருப்பதாக .தெரிகிறது. மற்ற பதிப்பகத்தாரும் சேர்ந்தால் 
நல்லது.
நான் உங்கள் ஆக்கங்கள், எவையெல்லாம் 
கிண்டில் பதிப்பில் உள்ளதோ, அனைத்ததையம் வாங்கி விட்டேன். மற்ற ஆக்கங்கள் 
கிண்டில் பதிப்பாக வர வாய்ப்புள்ளதா? முக்கியமாக வெண்முரசு கிடைக்குமா? 
அன்புடன் 
சந்திரசேகர் 
அனைத்து நூல்களும் வெளிவந்தபின்னர் கிண்டிலில் வெளியிடலாமென இருக்கிறார்கள்
ஜெ
