பீமன் செய்ததை மனதினுள் நடித்துப் 
பார்த்தவர்கள்தான் மற்றவர்களும்.  ஆனால் அதை செயலில் காட்டிய பீமன் மேல் 
ஏன் கடிந்து கொள்கிறார்கள்? 
பீமன் சொல்வது போல 
அவன் காட்டாளன். அவனிலிருந்து வருவது வன ஆற்றல்.   ஜராசந்தனும் தன்னை 
காட்டாளன் என்றே சொல்லிக் கொண்டான். அவனது வன ஆற்றல் பீமனால் அன்று சமன் 
செய்யப்பட்டது.  
பீமன் செய்தது ஒரு கணவனாக சரி. 
காட்டாளன் என பீமன் தன்னை அறிவிக்கும் போது . அவனது ஆற்றலின் எதிர் விசையாக
 ஒருவன் அவன் முன் வர எல்லா சாத்தியமும் உண்டு. ஜாராசந்தனுக்கு நிகழ்ந்தது 
போல.  அது நிகழாமல் பீமனின் வன ஆற்றல்  எல்லைக்குள் நிற்கவேண்டும் எனில் 
அந்த எதிர் ஆற்றல் அறம் மட்டுமாகவே இருக்க இயலும். ஆகவேதான் அர்ஜுனன் 
 தர்மனை அவனது நிலையில் இருந்து இறங்கி வரவேண்டாம் என தடுக்கிறான். தர்மன் 
அமர்ந்திருப்பது அறத்தின் பீடம்.[ முண்டன் ஆடிக்காட்டும் களி விளையாட்டில் 
எல்லா காய்களையும் தட்டி எறிந்துவிட்டு இறுதியில் அறம் மட்டுமே 
நிற்கிறது]  ஆம் பீமன் தான் இறங்கி வரவேண்டும்.  வருகிறான்.
திரௌபதி
  இப்போதுதான் அவளது இடத்துக்கு சரியாக வந்து சேர்கிறாள். முன்பு பானுமதி 
மருமகளாக அஸ்தினாபுரி நுழைகையில் திரௌபதி அவளுக்கு ஒரு செய்தி 
அனுப்புகிறாள் , அனைவருக்கும் அன்னையாக உன்னை பாவித்துக் கொள்ளலாம், ஆனால் 
அந்த நிலையில் வாழ்வது என்பது உன்னால் ஆகுமா  என்ற ரீதியில் ஒரு செய்தி 
அது.
இன்று திரௌபதி பீமன் வசம் சொல்வது  அவள் 
 உள்ளே என்ன நிலைக்கு வந்து விட்டாள் என்பதை அவனுக்கு உணர்த்தவே. முன்பு 
சகாதேவன் திரௌபதி வசம் சொல்வான் ''உண்மையில் உன்னால் வஞ்சம் கொண்டு வாழ 
முடியாது. உன்னுள் வாழும் கருணையை அன்னையை நீ அஞ்சுகிறாய்'' . அது இன்று 
உண்மையாக்கி நிற்கிறது.   நீலன் திரௌபதி வசம் சொல்கிறான். ''ஆம் எல்லாம் 
குருதி குடித்தே நிறைவடையும், அந்தக் குருதியில் உன் உதரக் கொடிவழியின் 
 குருதியும் கலந்திருக்கலாம்''   என்கிறான்.
அன்று
 சபையில் பீமன் சபதம் செய்கையில் திரௌபதி அனைத்தையுமே உள்ளே கண்டு விட்டாள்
 . மைந்தன் துயர்  எனினும் தயார் என்கிறான் பார்த்தன் . ஒரு தந்தையாக அவனது
 எல்லை இது வரை மட்டுமே. திரௌபதி சொல்கிறாள் ''உங்களால் களத்தில் குருதி 
சிந்தி மடியும் அனைவர்க்கும் அன்னை நான்''   ஆம். அபிமன்யுவுக்கு, 
கர்ணனுக்கு, துரியனுக்கு, பீஷ்மருக்கு  எல்லோருக்கும் அன்னை அவள். 
எந்த அன்னை முன்னும் ஒரு மகன் அவளது மற்றொரு மகனை தான்  கொல்லும் நியாத்தை, அது நியாயம்தான் என ஏற்றுக்கொள்ள வைக்க முடியுமா என்ன? 
நீ
 சாக வேண்டியவன் என காந்தாரி துரியனை சபிக்கலாம் . ஆனால் துரியன் 
சாகவேண்டியவன் என பீமன் காந்தாரி வசம் ஏற்பு கொள்ள வைக்க முடியாது.
கடலூர் சீனு

