Saturday, February 11, 2017

விக்கி-கடிதம்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
     
  வெண்முரசு விக்கிபீடியா பக்கம் நீக்கப்பட்டது தமிழ் இலக்கியத்திலுள்ள குறுகிய மனங்களைக் காண்பிக்கிறது.வெண்முரசினை தினமும் வாசிக்கிறேன் என்பதை பெருமிதத்துடன் எண்ணும் என்போன்ற எண்ணற்ற வாசகர்கள் போதும் எத்தனை இடர் வந்தாலும் கடக்க.
 
 தமிழின் ஒரு மிகச்சிறந்த முயற்சியான இதை அங்கீகரிக்காதவர்களுக்கே அது இழுக்கு.என்றென்றும் நிலைத்து நிற்கும்   முக்கிய படைப்பான வெண்முரசு அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதை நான் மனதில் எண்ணிக்கொண்டே தான் இருந்தேன் என்பதே உண்மை.ஏன் இம்மாபெரும் படைப்பு ,முயற்சி கவனம் பெறவில்லை என்று என் நண்பர்கள் பலரிடம் கூறியிருக்கிறேன்.அதன் உச்சமாக வெண்முரசின் முயற்சியை கீழ்படுத்தவே இத்தகைய செயல்கள் நடைபெறுகின்றன.
       
விஷ்ணுபுரம் வெளிவந்த போது அதைப்பற்றிய கிண்டலான எதிர்மறையான குறிப்புகள் நான் வெகுஜன இதழ்களில் வாசித்தது நினைவுக்கு வருகிறது. என் கல்லூரி நாட்களில் அப்பொழுது தான் உங்கள்  எழுத்துகள்  அறிமுகம்.
   
அப்படியே தான் இன்று வெண்முரசிற்கும் நடக்கிறது.அம்முயற்சி எத்தனை கடும் உழைப்பு என்பதை வாசகர்களாகிய நாங்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம்.உங்கள் பணி என்றும் வலு பெறவே விரும்புகிறேன்.சிறியோரைக் கடந்து விடுங்கள்.
நன்றி

மோனிகா.