ஜயத்ரதன் பீமன் வசம் சிக்கி சின்னாபின்னம் அடைவது கண்டு ,மனிதர்களை தவிர்த்து குரங்குகள் கூட விதிர்த்து அமைதி அடைந்து விடுகிறது. 
சபையில்
 அடிமைப்பட்ட தர்மனை நூறுக்குடையோன் ஒருவன் அடிக்கிறான். அப்போது 
அருகிருக்கும் பீமன் வெறுமேதான் நிற்கிறான்.   ஆனால் இன்று திரௌபதி என்று 
வருகையில்  சிக்குபவர்களை துவம்சம் செய்கிறான். காரணம் அன்றைய நிகழ்வு 
மொத்தமும் தருமனே வருவித்துக் கொண்டது. அதில் பீமன் எதுவும் 
குறுக்கிடவில்லை. மேலும் மூத்தவருக்கு கட்டுப்பட்டே நிற்கிறான். ஆனால் 
திரௌபதியை அவமதிப்பது என்பது வருவித்துக்கொண்டது என்பதற்கு வெளியே, 
நேர்ந்து விட்டது என்ற எல்லையில் நிகழ்கிறது. இங்குதான் பீமன் ரௌத்ரம் 
கொள்கிறான். 
இன்றும் அதேதான்.  அன்று போலவே 
இதுவும் வருவித்துக்கொண்ட ஒன்றல்ல. இங்கு நிகழ்ந்தது ஒரு அத்துமீறல். 
 அர்ஜுனனும், திரௌபதியும் அங்கு ஜயத்ரதன் உருவில் துருபதனைக் 
கண்டிருக்கலாம்.  அர்ஜுனன் பீமனுக்கு உரைக்கும் நெறிக்குப் பின் அவனுள் 
கறந்த குற்ற உணர்வு இருக்கலாம். 
ஆனால் பீமன் 
காட்டுவாசி. அவனுக்கு அவனே சொல்வது போல இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. 
 மிருகங்களுக்கு எப்படி வேறொரு சிந்தனை உதிக்காதோ அப்படித்தான் பீமனும். 
இந்த ஒற்றைப்படையால்தான்  மாமங்கலையின்  மனதின் பிரிய 
பதிகளில்  தனித்துவமான மணாளனாக இருக்கிறான் பீமன். 
கடலூர் சீனு

