Tuesday, February 14, 2017

விலங்குகள்





12 நாட்களாக தொடர்ந்து வந்த குரங்குகள் இன்று இல்லை. மாமலர் பீமனின் பயணத்தைக்குறிiத்தென்பதாலோ என்னவோ மந்தனுடன் மந்திகளும் இணைந்தே இருந்தன நேற்று வரை. அவற்றின் சேட்டைகளில் மகிழ்ந்திருந்தேன், பார்த்தனின் பயணப்பைகளை, தருமனின் சுவடிக்கட்டுகளை, பீமனின் உணவுக்கலத்தைதேறலை, தேறலில் ஊறிய கனிகளை,பீமன் குளிக்க கொதித்துக்கொண்டிருக்கும் நீரை, என ஒன்றையும் விட்டு வைக்காமல் ஆராய்ந்துகொண்டும், நகுல சகாதேவர்களின் தலையிலும் தருமனின் ஆசனத்திலுமாய் எங்கெங்குமாய் மந்திகளே நிறைந்து இருந்தது இத்தனை நாட்களாக.

சைந்தவர் பாஞ்சாலியை கொண்டு செல்கையில் முகர்ந்து அவனைக்காட்டிக்கொடுத்ததும் , ஜெயத்ரதன் மிதித்து கூழாக்கப்பட்ட போது பின்னுக்குச்சென்று ஒன்றுடன் ஒன்று கட்டிக்கொண்டு அஞ்சியதும் அவையே.
அன்று அந்த வெறியாட்டில் அஞ்சியபடி அமர்ந்த குரங்குகளின் மனநிலையிலேயே வாசிக்கையில் நானும் இருந்தேன் 

. இருளில் தோட்டத்தில்  திரெளபதி மாமரின் மணம் பெற்று அமர்ந்திருக்கையில் அவளுடன் கூடவே மரக்கிளைகளில் இருட்டிலும், பீமன் புலரிக்கு முன்பாக கோமதியில் நீராடுகையிலும்  விழிகள் மின்ன பார்த்தபடி குவிந்தமைந்துமிருந்தன  குரங்குகள்.

பயணம் துவங்கிய பீமனுடன் எல்லைவரையிலும் வந்து அவை நம் எல்லோரிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டனவா?

//துயர்கொண்ட நெஞ்சுடன் பீமன் சொன்னான்நான் அதைச் செய்ததனால் என்னை விரும்புகிறாள். ஏனென்றால் அது விலங்கியல்பென்று எண்ணுகிறாள். அன்று அக்குரங்குகள் அஞ்சிப் பின்னடைந்து அமர்ந்திருப்பதை அவள் காணவில்லை. அவை கொலைக்கூத்தாடும். கிழித்து உண்டு களிக்கும். வஞ்சம் சுமப்பதில்லை.//

வெரும் சேட்டைகள் செய்பனவாய் ஜெ இந்த தொடரில் ஆரம்பத்திலிருந்து குரங்குகளை காண்பித்தாலும் அவற்றின் பல இயல்புகளை இதிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது, பீமன் செய்ததை விலங்குகளின் இயல்பிலும் கூட சேர்க்க முடியாதென்பதை பீமனும் உணருகின்றான். மனைவியின் மேலுள்ள காதலில் மட்டுமல்ல அவன் மனதில் சேர்ந்திருக்கும் வஞ்சங்களெல்லாமே அன்று அவன் கைகளிலும் கால்களிலும் நிறைந்து விட்டது.

தருமன் முன்பு அவரிடம் மிகப்பிரியமாக இருந்த குரங்கு குட்டிஒன்றை விட்டுப்பிரிந்த துயர் தாளாமல் கண்ணீர் உகுத்தது போல  நேற்றுடன் விடைபெற்றுக்கொண்ட குரங்ககளை  எண்ணி வருந்திக்கொண்டிருக்கிறேன்.
லோகமாதேவி