Thursday, February 16, 2017

பெண்ணின் கணவர்கள்




ஜெ

வெண்முரசின் பாதை ஆண்பெண் உறவின் நறுமணங்களை நோக்கி என்று தெரிகிறது. அதை அறிவதற்கு உரியவன் பீமன் மட்டுமே. கடைசியில் பீமன் மட்டும்தானே ஆண்மகனாக அவள் மனசிலே நிற்கிறான்.

அந்த ஐந்து கணவர்களும் ஐந்து வகைகளிள் பாஞ்சாலிக்கு அர்த்தப்படுவது வெண்முகில்நகரத்தையும் நினைவில்கொண்டு வாசித்தால் பலவாறாக விரிகிறது. அவளுக்கு ஐந்துபேருமே வேண்டும். ஒரு அறிஞனுக்கும் ஒரு போக்கிரிக்கும் இரு விளையாட்டுப்பையன்களுக்கும் அவள் தோழியாக இருக்கிறாள். ஆனால் இந்த ஆண்மகனுக்குத்தான் முழுசாக மனைவியாகிறாள்

அதிலும் அந்த ஐந்தும் அவளுக்கு சின்ன வயசில் கிடைத்த இரண்டு உறவுகளின் மிச்சம் என்பது அழகான கற்பனை. துருபதன்தான்  தருமனும் சகதேவனும். திட்டதும்யன் அர்ஜுனனும் நகுலனும். பீமன் அவள் கனவிலிருந்து வந்தவன்

சாரங்கன்