Wednesday, November 7, 2018

போரைக்காணுதல்



ஜெ



திருதராஷ்டிரர் போரை எதிர்கொள்ளும் விதத்திலிருக்கும் மாயங்கள் ஆச்சரியமானவை. அவர் இரட்டைநிலை அடைந்து போரை ரசிக்கிறார். போரில் ஈடுபடுகிறார். அதேசமயம் போரில் துக்கிக்கவும் செய்கிறார். போர் முடிந்ததும்தான் அவருக்கு உண்மையில் தன்னுடைய மைந்தர் செத்துப்போன செய்தியே உறைக்கிறது. தன் மைந்தரின் இறப்புக்காக அவர் அடையும் துக்கமும் வலியும் அபாரமாகச் சொல்லப்பட்டுள்ளன

பொதுவாக மரணம் நிகழும்போது நாம் அது நிகழவில்லை என நினைக்கிறோம். இறந்தவர்கள் வேறு ஊர்களில் இருக்கிறார்கள் என்றோ அவர்கள் வந்துவிடுவார்கல் என்றோ நல்லசெய்தி வரும் என்றோ நினைக்கிறோம். வாழ்க்கையில் இதை பலமுறை நான் கண்டிருக்கிறேன். மனோசாஸ்திரத்தில் இதை ஒத்திப்போடும் முயற்சி என்பார்கல். இது ஒருவகையான இளைப்பாறுதல்தான். திருதராஷ்டிரரும் அந்த மனநிலையில்தான் உழல்கிறார்


ராஜேந்திரன்