ஜெ
பன்னிரு பகடையின் இதுவரை வந்த அத்தனை கதைகளுமே duality என்னும் ஒற்றை மையத்தைச் சுற்றி அமைந்துள்ளன. அந்த ஒருகையை கண்டுபிடித்த்துமே எல்லா தனிக்கதைகளும் ஒன்றாகிவிட்டன
ரம்பகுரம்பனின் இருநிலை. அதன் பின் அவன் குழந்தைகளைப்பெறுவது. அவன் மனைவி மகிஷியின் இருநிலை. அவள் கற்பரசி. ஆனால் காமம் கோள்ளும்போது கணவனைக் கொல்கிறாள்
ரக்தபீஜனின் இருநிலை. இந்திரனின் இருநிலை. தேவியின் இருநிலை. அதன்பின் ஜரர்களில் உள்ள வாழ்க்கையின் ஓடும் இருநிலை. அம்மா தேடுவது பிள்ளை இன்பத்தை. ஆனால் ஏழுபிறவிக்குண்டான துன்பமாக அதை அவள் அடைகிறாள்
அதன் பின் புருகத்ரதனின் மனைவியர் இரட்டையர். காக்ஷீவான் கொண்ட இருநிலை. இப்படியே பல வடிவங்களில் விரிகிறது நாவல்
முருகேஷ்