Wednesday, April 6, 2016

வெண்முரசு நாவல்கள்






மதிப்பிற்குறிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,

உங்களது படைப்புகளின் ஒவ்வொரு எழுத்துகளையும் வாசித்து, ஒவ்வொரு சொற்களையும் ஸ்லாகித்து, அதன் அர்த்தங்களில் பிரம்மித்து, உங்கள் ஆளுமை விரிதிறனில் விழுந்து, எழுந்து, மீளமீள விழுந்து, கரைந்துகொண்டிருக்கும் கோடிக்கணக்கான சுவைஞர்களுல் இதோ இந்த கடிதம் எனக்கான அடையாளம்.

இதுகாறும் திறந்தறியாத ஆழமான இலக்கிய வாசிப்பு என்னும் எனது சித்தத்தின் கதவுகளை முதன்முதளாக வருடித்திறந்தது உங்களது ‘வெண்முரசு’. மகா உன்னதமான படைப்பு. மகாபாரதக் கதை என்பதனால் இதைச் சொல்லவில்லை. நாம் வாழும் காலத்திற்குமுன் என்றோ நிகழ்ந்த சில அரசியல் நுட்பங்களை, வாழ்வியல் எதார்த்தங்களை, ஏற்ற இரக்கம் நிறைந்த மனிதமனச் சுவடுகளை, பெரும் விழைவுகளை,விழைவுகளின் ஆழமான பின்னணிகளை, அப்பின்னணிகள் குறித்த உங்கள் மனப்பதிவுகளை சில மெல்லிய கற்பனைகளை நாம் வாழும் காலத்திற்குப்பிறகும், எளிமையும், வலிமையும் கலந்த தங்களது நவீன எழுத்துக்களால் நிலைபெறச் செய்கிறீர்கள்...! 


இந்த முயற்சி மகாபாறதம் என்னும் ‘திருவினையை ஆக்கட்டும்’.

            பாரதப் போருக்கான முதல் வித்தும், பாரதக்கதைத் தொடக்கத்திற்கான முதற்புள்ளியும் அமைந்த ‘முதல்கனல்’ லேசான கற்பனையும், தத்துவார்த்தமும் கலந்த பெருவெளி.

            பாரத பெண்களின் பெருவிழைவாலும், அரசு சூழ்கையாலும் கட்டப்பட்ட மாபெரும் அரசியல் தளத்தின் பின்னணியாக விளங்கும், அவர்களது உள்ளத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் ‘மழைப்பாடல்’ புதுமணமும், நெகிழ்வுத்தன்மையும் கலந்த எழுத்தியல் வண்ணங்களால் தீட்டப்பட்ட நடையியல் சித்திரம்.

            மழலை உள்ளத்தின் எண்ணக்கடலை பதிவுசெய்துள்ள ‘வண்ணக்கடல்’ கல்விச் சிந்தனைகளின் கருவூலம். பேரன்பு, பெறற்கறி நட்பு, இவ்வெண்முரசின் பகைமுரசிற்கு பின்புலமான பெருஞ்சினம் ஆகியவை இவற்றிலுள்ள எதார்த்தப்பதிவுகள்.

            மூவடியில் உலகளந்தவனுக்கென்று 38 அத்தியாயங்களில் ஒரு இலக்கியத் தொட்டில் ‘நீலம்’.
            பாரதமென்னும் கண்ணீர் சரித்திரத்தின் ரோஜா புன்னகை அத்தியாயம் ‘பிரயாகை’.

            குருதிகொல் கொற்றவையான கருமுகில் எழுப்பிய ‘வெண்முகில் நகரம்’. (இந்த இந்திரப் பிரஸ்தத்தின் பெயர் மாற்றமே ஒரு தனிப்பெரும் அழகு...!)

            கடல் நீலம் வென்ற, உடல் நீலம் கொண்ட எண்ணத்தின் வண்ணத்திற்கோர் ‘இந்திர நீலம்’.

             தேடித்தேடி கண்டதில் சலித்து, பின் சலிப்பில் தேடி அமையும் விஜயனுக்கும், அவ்விஜயன் அழிவுக்கென்று கொண்ட வில்லுக்கோர் ‘காண்டீபம்’.

            கொடுத்துச்சிவந்த நீள்கரம்கொண்ட ‘செய்யோனுக்கோர் வெய்யோன்’. என்பதாக வெளிவந்த ஒன்பது நூல்களும், சிறப்பானவை

பிரியா