Monday, July 10, 2017

யானைகளின் படிமம்




அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் கதைகளிலும் நாவல்களிலும் வரும் யானைகளின் படிமம் பல வகைகளில் வளர்ந்துகொண்டே இருப்பது. அதை கட்டற்ற அகத்தின் படிம்மாகவே எனக்கு தோன்றுகிறது. தன் சங்கிலியை தானே எடுத்துசெல்லும் யானை வெண்முரசுவில் –வண்ண கடலில் மூன்று இடங்கள் எப்பொதும் நினைவில் உள்ளது.
விதுரரின் தாய் சிவை அணங்கு பிடித்து அரண்மனை உப்பரிகையில் உட்கார்ந்திருக்கும்போது கர்ணன் அஸ்தினாபுரம் நகர் நுழையும்போது
பாண்டவர்கள் திரௌபதியை வெற்றி கொள்ள மாறுவேடத்தில் நகர் நுழையும்பொது

ஆனால் இப்பொது நடந்துகொண்டிருக்கும் நீர்கோலத்தில், அந்த படிமம் தானாக வந்து விடுகிறது. அதுவும் திரௌபதிக்கு, அவளின் உடலமைப்பு, அவளின் கம்பீரம் அவளே விரும்பினாலும் மாற்ற முடியாது போல. பீமனுக்கும்.

   

ஆனந்த்