Wednesday, July 12, 2017

இந்திரன் ,கலி





அன்புள்ள ஜெ

கரவுக்காட்டில் மேலே இந்திரன் எழுகிறான். கீழே கலி காகங்களின் வடிவில் எழுகிறான். மண்ணுக்கு அடியில் நாகங்கள் எழுகின்றன. மூன்று அடுக்குகளாக அந்தக்காடு நடக்கப்போகிரது. அது ஒரு கனவு. அங்கே அத்தனைபேருமே ஒரு கனவுநிலையில் இருக்கப்போகிறார்கள் என்று தெரிகிறது.

கஜன் நிலவைப்பார்க்கும் இடம் அழகானது. காட்டுக்குள் அந்திவெளிச்சம் ஒரு தூண்போல விழுந்து கிடப்பதும் விழிக்கு ஒளி தெரியாமல் வெறும் மிளிர்வாகவே இலைகள் ஒளிவிடுவதுமெல்லாம் கனவு என நினைக்கத்தோன்றுகிறது

மகாதேவன்