Thursday, July 27, 2017

கடந்து செல்ல முடியாத வரிகள்






கடந்த மூன்று நாட்கள் அத்தியாத்தை ஒன்றாக வாசித்து கொண்டிருநதேன் '"ஆம் நானே தான் அணி புனைய செய்தேன் .அங்கே குடிகள் முன் என் இளவரசி எளிய பெண்ணாக சென்று நிற்கவேண்டியதில்லை தெய்வங்கள் அவ்வாறு எண்ணுமெனறால் அவ்விழிமகன் என் இளவரசியின் அணிகளை களையட்டும் " என்றாள்.அனைத்தும் இழந்து தமயந்தி மரவுரி ஆடை அணிந்து பழக்கமில்லாததால் அதை மார்புடன் இரு கைகளாலும் பற்றி கொண்டு நின்றது 

அரண்மனை கடந்து செல்லும் போது குடிகள் கையில் கிடைத்தை அவர்களின் மீத வீசியது ,அவமான சொற்களை பேசியது கடந்து செல்ல முடியாத வரிகள் 

தொடர்ந்து வாசிக்க முடியாமல் மனம் உறைந்து ,கண்கள் நிறைந்தது 
தற்போது எனது ஆப்பிரிக்கா நேரப்படி இரவு எட்டு மணிக்கெல்லாம் வெண்முரசு வாசித்து முடித்து விடுவேன் .நேற்றைய வரிகள் கடந்து செல்ல இயலாமல் இரவில் பத்து மணிக்கு மேல் அறையைவிட்டு வெளியே சென்றேன் .நட்சத்திரங்களே இல்லை வானில் ,மழை துாறிக்கொண்டிருந்தது உடல் நனைந்த பின் வந்து படுத்துக்கொணடேன் .

இன்று காலை முனனரே நான்கரை மணிக்கே விழித்துகொண்டேன் .காலை முதலே பல வரிகள் மனதில் ஓடுகிறது .

இந்த அத்தியாயம் 60 மீண்டும் வாசிக்க வேண்டுமென எண்ணம் 
கண்கள் நிறயாமல் வாசிக்க முடியுமா என தெரியவில்லை 
ஷாகுல் ஹமீது