Friday, July 14, 2017

கரவுக்கானாடல்:




விராடபுரியின் கரவுக்கானகத்திற்கு வருகை தந்துள்ள அரச குடும்பத்துடன் மாற்றுரு கொண்டவர்களும் வந்து சேர்ந்து விட்டிருக்கிறார்கள். இது ஆழ்மனம், இங்கு மாற்றுரு கொள்ள இயலுமா என்ன? எனவே தான் அந்தி சூரிய ஒளியில், இருள் கொண்ட, சூது கொண்டாடும் காந்தார நாட்டின் குங்கன் கூட பொன்னிற ஒளிச் சுடர இருக்கின்றான். அது தருமன் கந்தமாதனத்தில் தன்னை ஆவியாக்கி செய்த வேள்வியின் பலன் அல்லவா. அது தானே அவன். இது வெறும் மாற்றுரு தானே. குதிரையைப் பற்றிக் கொண்டு வரும் கிரந்திகன் கூட அழகனாகிவிடுகிறான் இக்கானகத்தில்!! சமைக்க வந்த வலவன் வானை நோக்கி அமர்ந்த வண்ணம் மீண்டும் பீமனாகி விடுகிறான். பிஹன்னளை என்னவாகப் போகிறாள் என்று இனித் தான் காண வேண்டும். உத்தரையின் கனவுக் காதலனாகக் கூடுமோ!!!

இவ்வளவு விவரங்களிலும் ஒரு சிறு நுட்பத்தைப் படைக்க ஆசிரியர் தவறவில்லை. இங்கே சகதேவன் வரவில்லை. அப்படியென்றால் அவன் ஒருவன் மட்டுமே மாற்றுரு கொள்ளவில்லை!! அவன் ஆழத்தில் எப்போதுமே நேமியன் தான்!!

அன்புடன், 
மகராஜன் அருணாச்சலம்