Friday, November 2, 2018

காவியம் பற்றி...


காவியம் சுசித்ரா


ஜெ

சுசித்ராவின் நீண்ட கடிதம் பலவகையிலும் வாசிக்க வைத்தது. நல்ல கடிதம் அது.

இளைய யாதவர் போர்க்களத்திலே வாசிக்கும் காவியத்தைப்பற்றி அந்தக்கட்டுரையில் சுசித்ரா எழுதியிருந்தார். அவர் முதலில் சின்னப்பையனாக வந்தபோது போர்க்களத்தில் இனிப்பை வாயிலிட்டு மென்றபடியே கொன்றுகுவித்தார். அந்த இனிப்புதான் இப்போது காவியமாக ஆகிவிட்டிருக்கிறது

அதற்கு என்ன பொருள் என்று யோசித்தால் கண்ணனின் குணச்சித்திரத்தையே சென்றடையலாம். அலைகளிலும் நிலையழியாமல் இருப்பவன். அழிவுகளில் அசைவில்லாமல் இருப்பவன். துக்கங்களிலும் தன் உள்ளே இருக்கும் மகிழ்ச்சியை விடாமலிருக்கும் யோகி

இளைய யாதவர் வாசிக்கும் அந்தக்காவியமும் முக்கியமானது, விருத்திரனும் இந்திரனும் ஒன்றே என்று சொல்லும் நூல் அது

சுவாமி