Sunday, November 4, 2018

நொடி



இனிய ஜெயம் 

விந்தனுக்கும் ,அனுவிந்தனுக்கும் இடையே  ஒரு நொடி . அது ஏன் என்று கதைக்குள் இல்லை எனும் வசீகர மர்மத்தை சுட்டி இருந்தார் சாரங்கன் .

என் வரையில்       அது அன்னையின் சொல் .பீமன் பிறக்கும் போது குலாந்தகன் என்கிறாள் குந்தி அந்த சொல்லே வாழ்கிறது  .விந்த அனுவிந்தன் பிறக்கும்போது இவன் ஒரு நொடி முந்திப் பிறந்தவன் என்பதை முதல் சொல்லாக வைக்கிறாள் அவர்களின் அன்னை .

அது அன்னையின் சொல் . அந்த நொடி வாழ்வது அன்னையின் சொல்லால்தான்


இந்த பதிவை எழுதிய பிறகு மீண்டும் சென்று வாசித்தேன் .விந்த அனுவிந்தனின் தாய் இவன் ஒரு நிமிடம்  முன்பாக பிறந்தவன் என அறிவிப்பதன் வழியே ,எதை தவிர்க்க விரும்புகிறாள் ? சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டு சாவதை . ஆம் அது தவிர்க்கப்பட்டு விட்டது . அவள்  அந்த சொல்லின் வழிய அளித்த ஆசி அது . இவன் ஒரு நிமிடம்  முந்திப் பிறந்தவன் என விந்தனை 'தொட்டுக் காட்டி' சொல்கிறாள் .அதுவும் ஆசியே ,அவள் கரம் முதலில் தொட்ட விந்தன் ,அனு விந்தனைக் காட்டிலும் ஒரு  நிமிடம் அதிகமாகவே இவ்வுலகில் வாழ்த்து மரிக்கிறான் 
கடலூர் சீனு